கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

இன்ஸ்பெக்டரை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த விஜயகுமாரசுவாமிகள் கைது

சிதம்பரத்தில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டரை அசிங்கமாக திட்ட பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த விஜயகுமார சுவாமிகளை நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை

News image
Updated On :17 டிசம்பர் 2013, 1:53 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டரை அசிங்கமாக திட்ட பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த விஜயகுமார சுவாமிகளை நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம் அதிகாரிகளின் நிபந்தனையின் பேரில் பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் மண்டகப்படிக்கு நிறுத்தாமல் தேர் வீதிவலம் வந்து 11 மணிக்கே தேர்நிலையை அடைந்தது. பின்னர் 12 மணிக்கே தேரிலிருந்து ஸ்ரீநடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் இறக்கப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்திற்கு சென்றனர். இதனால் மாலை தேர் முன்பு நடைபெறும் மானிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவம் நடைபெறவில்லை.

இந்நிலையில் நிறுத்தாமல் தேரோட்டம் வெகு சீக்கிரம் நடத்தி, அவசர, அவசரமாக ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு சென்றதால் தொன்று, தொட்டு நடைபெற்றும் வரும் சம்பிரதாயங்கள் செய்ய முடியாமல் போனது. பெரும்பாலான மக்கள் தேர்த்திருவிழாவை பார்க்க முடியவில்லை. திருவெம்பாவை உற்சவம் நடத்த முடியாமல் போனது. எனவே இதனை கண்டித்து கீழசன்னதியில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் கூடினர். அப்போது டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் ஆகியோர் இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், வழக்குரைஞர் கீதா, பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரு வாரத்திற்குள் தேர் சம்பந்தமான அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேசி அடுத்த திருவிழாவிற்கு தேர்களை சீரமைக்க தக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் அப்போது அங்கு வந்த குறிஞ்சிப்பாடி தம்பிப்பேட்டை கேசவநாராயணபுரத்தில் ஆசிரமம் வைத்துள்ள விஜயகுமார சுவாமிகள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தையால் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தத்தை திட்டியதாக தெரிகிறது. இதனையடுத்து டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் போலீஸார் விஜயகுமார சுவாமிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் நகர போலீஸார் விஜயகுமார சுவாமிகள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.