அன்னதானம்: கடலூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கிழக்கு கோபுர வாயிலில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை அகில பாரத ஐயப்பா சேவை சங்க மாவட்டத் தலைவர் யாகமூர்த்தி தொடங்கி வைத்தார், ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் வி.சங்கர், கே.கணேசன், சிவக்குமார், ராஜா, கண்ணபிரான், வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமையில் சுமார் 2 ஆயிரம் பேருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்து ஆலயபாதுகாப்புகுழு சார்பில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானமும், புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.