தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அமெரிக்காவின் கிண்டல்களை சகித்துக்கொள்ள முடியாது: கமல்நாத் கண்டனம்

தேவயானி கேப்ரகேட் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மன்னிப்பு கேட்காது என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹார்ப்

News image
Updated On :20 டிசம்பர் 2013, 10:57 am

வேல்முருகன்

தேவயானி கேப்ரகேட் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மன்னிப்பு கேட்காது என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹார்ப் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் கூறுகையில்,

 தேவயானி மீதான நடவடிக்கைகளை அமெரிக்கா உடனடியாக கைவிட வேண்டும். அவர் நடத்தப்பட்ட விதத்திற்கு அமெரிக்கா கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். அமெரிக்காவின் கிண்டல்களை சகித்துக்கொள்ள முடியாது. காலங்கள் மாறிவிட்டது. உலகம் மாறிவிட்டது. உலக மாற்றத்துக்கு தக்கவாறு இந்தியாவும் மாறிவிட்டது என்பதை அமெரிக்கா புரிந்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.