கரும்பு விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஆட்சியரிடம் கோரிக்கை
புதுச்சேரி லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் தீபக்குமாரிடம் விவசாயிகள் கோரிக்கை


புதுச்சேரி லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் தீபக்குமாரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2012-13-ஆம் ஆண்டு அரவைப் பருவத்துக்கு கரும்பு அனுப்பி 12 மாதங்கள் ஆகியும் அதற்கான தொகையை வழங்கவில்லை. மேலும்
முத்தரப்புக் கூட்டத்தை கூட்டி கரும்பு விலை நிர்ணயிக்கவில்லை. பயிர்கடனுக்காக விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.3 கோடி கடன் தொகையை காலத்தோடு ஆலை நிர்வாகம் வங்கிகளுக்கு செலுத்த தவறியதால் அதற்காக விவசாயிகள் கூடுதல் வட்டி, அபராத வட்டியை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மேலும் நடப்பாண்டு கடன் பெற்று சாகுபடி செய்துள்ளோம்.
கரும்பு விவசாயிகள் நலன் கருதி அருகே உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பை வெட்டி அனுப்ப தடையில்லா சான்றை மாநில அரசு வழங்க வேண்டும், என வலியுறுத்து துணைநிலை ஆளுநர், முதல்வர், வேளாண் அமைச்சர், இயக்குநர், சர்க்கரை ஆலை சேர்மனுக்கு மனு அனுப்பியும் பயனில்லை.
இதுதொடர்பாக கரும்பு விவசாயிகள் நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை நடப்பாண்டு அரவைப் பணியை இதுவரை தொடங்கவில்லை. நவம்பர் மாதம் வெட்டி அனுப்ப வேண்டிய 20 ஆயிரம் டன் கரும்பு, டிசம்பர் மாதம் வெட்டி அனுப்ப வேண்டிய 40 ஆயிரம் டன் கரும்பு அரவை தொடங்கதாதால் சாகுபடி காலம் முடிந்து முதிர் பயிராக மாறி விவசாயிகளுக்கு இழப்பு உண்டாகி உள்ளது.
விவசாயிகளுக்கு மேலும் நஷ்டம் வராத வகையில் மொத்தமுள்ள 60 ஆயிரம் டன் கரும்பையாவது மாற்று சர்க்கரை ஆலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முத்தரப்பு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும், விவசாயிகளிடம் பிடித்தம் செய்த வங்கிக் கடனை உடனே வங்கிகளுக்கு வட்டி சேர்த்து அனுப்ப வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். மேலும் வாரம் ஒருமுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...