பதுக்கி வைக்கப்பட்டிருந்த 204 எரிசாராய கேன்கள் மற்றும் 200 போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல்

ஆரணி அடுத்த வெள்ளேரி கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 204 எரிசாராய கேன்கள் மற்றும் 200 போலி மதுபான பாட்டில்களை போலீஸôர் புதன்கிழமை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்
Updated on
1 min read

ஆரணி அடுத்த வெள்ளேரி கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 204 எரிசாராய கேன்கள் மற்றும் 200 போலி மதுபான பாட்டில்களை போலீஸôர் புதன்கிழமை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

ஆரணி அடுத்த வெள்ளேரி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததின்பேரில் ஆரணி டிஎஸ்பி என்.மணி மற்றும் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ய முற்பட்டபோது அங்கிருந்த 2 பேர் தப்பி ஓடினர். அவர்களை போலீஸôர் மடக்கி பிடித்தனர். பின்னர் வீட்டில் சோதனை செய்ததில் 204 கேன்களில் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதை பறிமுதல் செய்தனர். மேலும் 200 போலி மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் காலியாக உள்ள கேன்கள் மற்றும் போலி மதுபானம் தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.இவற்றை கடத்த பயன்படுத்தப்பட்டு வரும் காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரையும் விசாரணை செய்ததில் வெள்ளேரி பலராமன் மகன் தேசிங்கு(28) என்றும், இவரது உறவினருமான ஆரணி அடுத்த இந்திராநகர் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேசன்(45) என்று தெரியவந்தது. இவர்களை போலீஸார் கைது செய்து எரிசாராயம் எங்கிருந்து வருகிறது என்றும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்றும் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் சில வருடங்களுக்கு முன்பு வெங்கடேசன் என்பவர் ஆரணி அடுத்த இ.பி.நகரில் உள்ள வீட்டில் மதுபானதொழிற்சாலை நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கிராம மக்கள் அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com