சிவகங்கை மாவட்டம், அலவாக்கோட்டை பிரிவு அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி-அலவாக்கோட்டை சாலை பிரிவு அருகே முள் புதர் ஒன்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் எலும்புக்கூடாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தின் அருகே கருப்புநிற சேலையும், கருப்பு நிற ஜாக்கெட், கருப்புநிறத்தில் தலைமுடியும் காணப்பட்டது. இருபதிலிருந்து முப்பது தினங்களுக்கு முன் இறந்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். சடலம் எலும்புக்கூடாக ஆனதால் இறந்து போனவர் யார் என்ன என்ற விவரம் தெரியவில்லை. இதனால் இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் காணாமல் போன பெண்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்து மதகுபட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

