டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முஷாபர்நகர் முகாமில் வசிக்கும் 30 குடும்பத்தினர் மீது சட்ட விரோத  வழக்கு

கடந்த செப்டம்பர் மாதம் உத்தரப்பிரதே மாநிலம் முஷாபர்நகர் கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த கலவரத்தில்

News image
Updated On :27 டிசம்பர் 2013, 9:40 am

வேல்முருகன்

கடந்த செப்டம்பர் மாதம் உத்தரப்பிரதே மாநிலம் முஷாபர்நகர் கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த கலவரத்தில் வீடுகளை இழந்த பல் அரசு அமைத்த முகாமில் தங்கியிருந்தனர்.

கலவரம் குறைந்து படிப்படியாக மக்கள் தங்கள் சொந்த கிராமத்திற்கு திரும்பி வருகின்றர். தற்போதைய நிலவரப்படி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கலவரத்தில் பாதிக்கப்படாத  30 குடும்பத்தினர் முகாமில் அரசு இடத்தை ஆக்கிரமித்து தங்கியுள்ளதாக கூறி, அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து  சப்டிவிசனர் மாஜிஸ்த்ரேட் ரஜினிகாந்த் கூறுகையில்

கினோனி கிராமத்தைச் சேர்ந்த சிலர், கலவரத்தில் பாதிக்கப்படவில்லை. ஆனால் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள முகாமில் தங்கியுள்ளனர் என்றார். அவர்கள் மீது அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்ததாக வழக்கு தொடரப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.