2வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 334 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: தென் ஆப்பிரிக்கா 36\0
இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் இறுதிகிரிக்கெட் டெஸ்ட் போட்டி டர்பனில்


இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் இறுதிகிரிக்கெட் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்றுவருகிறது.. டாஸ் வென்று ஆடத்தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.. இந்திய அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 97 ரன்களும், புஜாரா 70 ரன்களும், ரகானே 51 ரன்களும், கோஹ்லி 46 ரன்களும், எடுத்தனர்.
தென் ஆப்ரிக்கா அணியில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டெயின் 6 விக்கெட்களையும். மோர்கெல் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடத்தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி சற்று முன்பு விக்கெட் இழப்பின்றி 36 ரன்களுடன் ஆடி வருகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...