சேரன்மகாதேவி கால்வாயில் வாலிபர் சடலம் மீட்பு
சேரன்மகாதேவி ரயில்வே கேட் அருகில் செல்விபுரம் விநாயகர் கோயில் பகுதியில் கன்னடியன் கால்வாயில் சனிக்கிழமை ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்காக சென்றனர். அங்கு ஒருவர் இறந்து கிடப்பது


சேரன்மகாதேவியில் கன்னடியன் கால்வாயில் இருந்து சுமார் 45 வயது மதிக்கக்கூடிய வாலிபரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
சேரன்மகாதேவி ரயில்வே கேட் அருகில் செல்விபுரம் விநாயகர் கோயில் பகுதியில் கன்னடியன் கால்வாயில் சனிக்கிழமை ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்காக சென்றனர். அங்கு ஒருவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கால்வாயில் இருந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. சுமார் 45 வயது மதிக்கக்கூடியவர், பிரவுன் கலர் லுங்கியும், ரோஸ் வெள்ளை நிறம் கலந்த ரெடிமேடு சட்டையும் அணிந்திருந்தார். வயிற்றுப் பகுதியில் மச்சம் காணப்பட்டது. வாய், கண்களை மீன்கள் கடித்திருந்தது. சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகி்ன்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...