மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சாவு
காட்டுமன்னார்கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமுறறு ஒருவர் இறந்தார். சக நண்பர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


காட்டுமன்னார்கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமுறறு ஒருவர் இறந்தார். சக நண்பர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நாஞ்சலூரைச் சேர்ந்த பாஸ்கரன் (42). இவர் வெள்ளிக்கிழமை இரவு லால்பேட்டையைச் சேர்ந்த தனது நண்பர் ஜாகீர்உசேன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் லால்பேட்டையிலிருந்து நாஞ்சலூருக்கு சென்றுள்ளார். அப்போது ஜாகீர்உசேன் மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார். காங்கிருப்பு எனுமிடத்தில் எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே பாஸ்கரன் இறந்தார். ஜாகீர்உசேன் படுகாயமுற்றி கவலைக்கிடமான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...