ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சேரன்மகாதேவி கால்வாயில் வாலிபர் சடலம் மீட்பு

சேரன்மகாதேவி ரயில்வே கேட் அருகில் செல்விபுரம் விநாயகர் கோயில் பகுதியில்  கன்னடியன் கால்வாயில் சனிக்கிழமை ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்காக சென்றனர். அங்கு ஒருவர் இறந்து கிடப்பது

News image
Updated On :28 டிசம்பர் 2013, 12:32 pm

ஷேக் அப்துல்காதர்

சேரன்மகாதேவியில் கன்னடியன் கால்வாயில் இருந்து சுமார் 45 வயது மதிக்கக்கூடிய வாலிபரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

சேரன்மகாதேவி ரயில்வே கேட் அருகில் செல்விபுரம் விநாயகர் கோயில் பகுதியில்  கன்னடியன் கால்வாயில் சனிக்கிழமை ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்காக சென்றனர். அங்கு ஒருவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கால்வாயில் இருந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. சுமார் 45 வயது மதிக்கக்கூடியவர், பிரவுன் கலர் லுங்கியும், ரோஸ் வெள்ளை நிறம் கலந்த ரெடிமேடு சட்டையும் அணிந்திருந்தார். வயிற்றுப் பகுதியில் மச்சம் காணப்பட்டது. வாய், கண்களை மீன்கள் கடித்திருந்தது. சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகி்ன்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.