டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரஷ்யாவில் பெண்தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்:13 பேர் பலி

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து  தெற்கு பகுதியில்  650 கிலோ மீட்டர் துரத்தில் உள்ளது வோல்காகிராட் நகரம். இங்கு உள்ள ரயில் நிலையத்தில் இந்திய நேரப்படி

News image
Updated On :29 டிசம்பர் 2013, 10:41 am

வேல்முருகன்

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து  தெற்கு பகுதியில்  650 கிலோ மீட்டர் துரத்தில் உள்ளது வோல்காகிராட் நகரம். இங்கு உள்ள ரயில் நிலையத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2.15 மணிக்கு பெண் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் உடல்சிதறி பலியாயினர்.மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை  எனினும் வடக்கு காகசஸ் மாகணத்தில் செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்பு ஒன்று இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் 6 வாரங்களில் ரஷ்யாவில் ஒலிம்பிக்போட்டி நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இதே நகரில் பெண் தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படைதாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.