திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ராமேசுவரத்தில் வெளிநாட்டு பணத்துடன் சுற்றி திரிந்த இலங்கை அகதி கைது

ராமேசுவரம் கோவில் சார்பு ஆய்வாளர் ஆறுமுகநையினார் தலைமையில் போலீஸார் ஞாயிற்று கிழமை அதிகாலையில்  ரயில்வே நிலையம் பகுதியில் ரோந்து பணிக்கு சென்றபோது அப்பகுதியில்

Updated On :29 டிசம்பர் 2013, 11:10 am

ராமேசுவரம் பகுதியில் வெளிநாட்டு பணத்துடன் சுற்றி திரிந்த இலங்கை அகதியை போலீஸார் கைது செய்து விசாரித்து  வருகின்றனர்.

ராமேசுவரம் கோவில் சார்பு ஆய்வாளர் ஆறுமுகநையினார் தலைமையில் போலீஸார் ஞாயிற்று கிழமை அதிகாலையில்  ரயில்வே நிலையம் பகுதியில் ரோந்து பணிக்கு சென்றபோது அப்பகுதியில் சந்தேகத்தின்படி நின்றிருந்த ஒருவரை விசாரணை செய்தனர். பின்பு அவரிடம் இருந்த  பையை சோதனை செய்தபோது வெளிநாட்டு பணம் அமெரிக்கன் டாலர் 860 ரூபாயும்,இந்திய பணம் 18 ஆயிரமும் வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.போலீஸார் பணத்தை கைப்பற்றி கைது செய்து  காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில் இலங்கை சிலாவம் மாவட்டம் ஆண்டிமுனைஉடப்பூர் பகுதிசேர்ந்த நாச்சிமுத்து மகன் அருந்தவநாதன்(42) என்றும் இவர் 2011ல் விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்து சென்னையில் தங்கியுள்ளதாகவும் மேலும் பாஸ்போட் விசா காலம் முடிந்தும் இலங்கைக்கு திரும்பி செல்ல விருப்பம் இல்லாததால் தலைமறைவாக திரிந்துள்ளார் என்று தெரிய வந்தது.இவருடைய மனைவி புஷ்பராணி மற்றும் இரண்டு மகள்கள் உள்பட மூவரும் தர்மபுரி அகதிமுகாம்மில் தங்கியுள்ளார். மேலும் அருந்தவநாதன் மீது பாஸ்போட் சட்டத்தின் கீழ் கை செய்து வெளிநாட்டு பணம் இருந்தது குறித்து  மேற்கொண்டு போலீஸார் விசாரித்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.