தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆதரஷ் ஊழல் பற்றி விவாதம் நடத்த தயார்: தேசியவாத காங்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்காக ஆதர்ஷ் குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் நடைபெற்ற  முறைகேடு பற்றிய

News image
Updated On :30 டிசம்பர் 2013, 9:45 am

வேல்முருகன்

ஆதரஷ் ஊழல் பற்றிய விசாரணை அறிக்கை மீது விவாதம் நடத்த தயார் என  தேசிய வாத காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்காக ஆதர்ஷ் குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் நடைபெற்ற  முறைகேடு பற்றிய விசாரணை அறிக்கையில் முன்னாள் முதலமைச்சர்கள் அசோக் சவான், மறைந்த விலாஸ்ராவ் தேஷ்முக், தற்போது மத்திய உள்துறை அமைச்சராக உள்ள சுஷில்குமார் ஷிண்டே உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது 

இந்த அறிக்கையை மராட்டிய மாநில காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு நிராகரித்தது. இது குறித்து காங் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆதர்ஷ் அறிக்கை  நிரகாரித்த மாநில அரசின் செயல் சரியல்ல என்று தெரிவித்திருந்தார்  இதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மகாராஷ்டிரா அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  .

 இந்நிலையில்,  ஆதர்ஷ் அறிக்கை விவகாரம் குறித்து தேவைப்படுமானால் சட்டப்பேரவையில் விசாரணை அறிக்கை மீது விவாதம் நடத்த தயார் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரிக் அன்வர் தெரிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கையை  மகாராஷ்ட்ரா மாநில அரசு மறுபரிசீலனை செய்தால் உள்துறை அமைச்சராக உள்ள சுஷில் குமார் ஷிண்டேவுக்கு நெருக்கடியான சூழ்நிலை உருவாகும். ஏற்கனவே, ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலுக்கு பொறுப்பேற்று ஷிண்டே பதவி விலக வேண்டும் என பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.