நெல்லையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் முற்றுகை, தள்ளுமுள்ளு
கவிலைப்படி உயர்வு, சீருடை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தை சிஐடியூத் தொழிற்சங்கத்தினர் திங்கள்கிழமை மாலை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.










