தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலைமறியல்: இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

காட்டுமன்னார்கோயில் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On :30 டிசம்பர் 2013, 1:55 pm

காட்டுமன்னார்கோயில் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள பூர்த்தங்குடி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பூர்த்தகங்குடி, கலியமலை, ம.உத்தமசோழன் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திங்கள்கிழமை காலை திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜன், வருவாய் ஆய்வாளர் மலர்விழி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிற 31-1-2014க்குள் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை அடுத்து கிராமமக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதனால் சிதம்பரம்-கந்தகுமாரன் செல்லும் கிராம சாலையில் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.