நெல்லை அருகே கட்டடத் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
சங்கரன்கோவில் அருகே கடன் தொல்லை காரணமாக கட்டடத் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


சங்கரன்கோவில் அருகே கடன் தொல்லை காரணமாக கட்டடத் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் வடக்கு பகுதியில் சிவகிரியை சேர்ந்த நாராயணன் என்பவருக்கு சொந்தமான தரிசு நிலம் உள்ளது. இங்கு உடல் எரிந்த நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி. கலிவரதன், காவல் ஆய்வாளர்கள் சேகர், ஜெயக்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சின்னசுரைக்காய்பட்டியை சேர்ந்த நாராயணன் மகன் ராமராஜ் (55). கட்டடத் தொழிலாளி. கடன் தொல்லையால் அவதிபட்டு வந்த ராமராஜ் கடந்த சில மாதங்களாக விஷ வண்டு தாக்கியதில் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதில் மனமுடைந்த அவர் தனது தந்தைக்கு சொந்தமான தோட்டத்திற்கு திங்கள்கிழமை வந்தாராம். அங்கு விஷம் குடித்தார். பின்னர் உடலில் டீசலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...