நெல்லையில் சீரமைத்த 2 நாளில் சேதமடைந்த தார்சாலை: எம்.எல்.ஏ. புகார்
பாளையங்கோட்டையில் சீரமைக்கப்பட்ட 2 நாளில் தார் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தரமற்ற வகையில் சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. புகார்


பாளையங்கோட்டையில் சீரமைக்கப்பட்ட 2 நாளில் தார் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தரமற்ற வகையில் சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. புகார் தெரிவித்தார்.
இது குறித்து டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலருக்கு அனுப்பியுள்ள புகார் மனு: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பேரவைத் தொகுதியில் மாநகராட்சி எல்லையில் பாளையங்கோட்டை மண்டலத்தில் வார்டு 20 யையும், திருவனந்தபுரம் சாலையை இணைக்கும் அதாவது, செயின்பால்ஸ் சாலை (ரயில்வே பீடர் சாலை) டிச. 28 ம் தேதி தார் விரிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது.
சாலை அமைக்கப்பட்ட 2 தினங்களிலே அச்சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டு குழியுமாக பழைய நிலையில் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையை தரமற்ற பணியால் சீரமைக்கப்பட்ட ஒரு சில தினங்களிலே பழுதடைந்து போக்குவரத்துக்கு பயன்படாத வகையில் உள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில் இதுபோன்ற தரமற்ற பணியினால் மக்கள் வரிபணம் வீணடிக்கப்படுகிறது. தரமற்ற சாலை அமைக்கப்பட்டது குறித்து முறையாக ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற பணியால் மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...