எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அனுமதி சேர்க்கைக்கு பணம் கொடுக்க வேண்டாம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு வேண்டுகோள்

வரும் கல்வி ஆண்டில் பிஇ., எம்இ., பி.எஸ்.சி விவசாயம்., எம்.பி.ஏ., எம்பிபிஎஸ், எம்டி., பிடிஎஸ், எம்டிஎஸ்., ஆகிய படிப்புகளுக்கு மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டுமென என

News image
Updated On :3 பிப்ரவரி 2013, 1:35 pm

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயில அனுமதி சேர்க்கைக்கு யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் ரா.உதயசந்திரன், சி.மதியழகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: வரும் கல்வி ஆண்டில் பிஇ., எம்இ., பி.எஸ்.சி விவசாயம்., எம்.பி.ஏ., எம்பிபிஎஸ், எம்டி., பிடிஎஸ், எம்டிஎஸ்., ஆகிய படிப்புகளுக்கு மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டுமென என ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் எவரிடமும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி சேர்க்கை அளிக்க மறுத்தால் கூட்டமைப்பிடம் முறையிட கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.