விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் பயங்கரம்: பிளஸ் 2 மாணவி உயிருடன் எரித்துக் கொலை

இதில் பலத்த காயமுற்ற கொலையாளியும் தீயில் காயமுற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2013, 7:45 am

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிளஸ் 2 படிக்கும் மாணவியை பள்ளிக்கு செவ்வாய்கிழமை காலை செல்லும் போது ஒருவர் தூக்கிச் சென்று வீட்டினுள் பூட்டி தீ வைத்து எரித்துக் கொலை செய்தார்.

இதில் பலத்த காயமுற்ற கொலையாளியும் தீயில் காயமுற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி, குருநாதர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு ராஜேஸ்வரி (17), கவிதா (14), முருகராஜ் ஆகிய பிள்ளைகள் உண்டு. ராஜேஸ்வரி, வன்னியம்பட்டி காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். ராமசாமி மொட்டமலை அருகே தரிசெட் அமைத்து தொழில் செய்து வருகிறார்.ராமசாமியின் வீட்டை ஒட்டி அருக்கு சொந்தமாக ஒரு வீடு உண்டு. அந்த வீட்டில் பா.ஆதிசக்திகுழந்தைவேலு (33) என்பவர் 4 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி (32) என்ற மனைவியும் தனசேகரன் (8), லட்சுமிதேவி (7) ஆகிய இரு பிள்ளைகளும் உண்டு. கடந்த 6 மாதத்திற்கு முன்னர் பசுமை வீடு திட்டத்தின் கீழ் ஆதிசக்தி குழந்தைவேலு வீடுகட்டி அருகே குடி சென்றுள்ளார். இருந்த போதிலும் தான் முன்பு வாடகைக்கு குடியிருந்த வீட்டில் தனது தாய் மற்றும் கணவரை பிரிந்து வாழும் தங்கையை குடிவைத்திருந்துள்ளார்.செவ்வாய்கிழமை காலை இந்த வீட்டில் யாரும் இல்லையாம். அங்கு ஆதிசக்தி குழந்தைவேலு மட்டும் இருந்துள்ளார். பக்கத்தில் உள்ள வீட்டில் இருந்த ராமசாமியும் அவரது மனைவி சுப்புலட்சுமியும் தங்களது தொழிற்சாலைக்குச் சென்றுவிட்டார்கள். காலை பள்ளிக்கு ராஜேஸ்வரியும் கவிதாவும் கிளம்பியுள்ளார்கள். வீட்டின் கதவை ராஜேஸ்வரி பூட்டிவிட்டு கீழே இறங்கும் போது, பக்கத்து வீட்டில் இருந்து ஓடிவந்த ஆதிசக்தி குழந்தைவேலு ராஜேஸ்வரியை தனது வீட்டிற்குள் தூக்கிச் சென்றுள்ளார். இதனைப் பார்த்த தங்கை கவிதா சப்தம் போட்டுள்ளார்கள். அருகில் உள்ளவர்களை கூட்டிவரச் சென்றுள்ளார். இந்த 5-10 நிமிடத்திற்குள் வீட்டிலிருந்து புகை வந்துள்ளது. வீட்டில் இருந்து மண்ணெண்னையை ஊற்றி ராஜேஸ்வரியை தீ வைத்துள்ளார். அவரை சேர்த்து பிடித்துள்ளார். இதில் ஆதிசக்திகுழந்தைவேலுவும் பலத்த காயம் அடைந்தார். இதில் ராஜேஸ்வரி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதிசக்தி குழந்தைவேலு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் இப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.