விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது
சிதம்பரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் உள்ளிட்ட போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்


சிதம்பரம் அருகே கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக சாக்குமூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை தாலுக்கா போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் உள்ளிட்ட போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புறவழிச்சாலையில் பொய்யாப்பிள்ளைச்சாவடி எனுமிடத்தில் சாக்குமூட்டையுடன் நின்று கொண்டிருந்த மெய்யாத்தூரைச் சேர்ந்த பாண்டியன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். சாக்குமூட்டையில் 72 பிராந்தி பாட்டில்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர். டாஸ்மாக் மதுபானக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி, கடைகள் மூடிய பின்னர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து பாண்டியனை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.6ஆயிரம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...