ஒரே நேரத்தில் 1000-ம் மாணவர்கள் பாடும் சேர்ந்திசைபாடல்களை வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பாடி சாதனை நிகழ்த்தினர். பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதனாத்தில் ஒரே நேரத்தில் 1000-ம் மாணவர்கள் தாளம் மற்றும் லயத்துடன் பாடும் இசைக்கச்சேரி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிரபல திரைப்பட பாடகியான எஸ்.ஜானகி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியது. 1957-ம் ஆண்டு முதல் நான் திரைப்படங்களில் பின்னணி பாடல்கள் பாடி வருகிறேன். இதில் இதுவரை 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடியுள்ளேன். தான் எந்த மொழியில் பாடினாலும் அதில் உயிரோட்டம் கலந்து உள்ளதாக கூறுகின்றனர். அதே போன்று இப்பள்ளியில் பாடும் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த பாடகர்களாக வரவேண்டும் ஆண்டவனிடம் வேண்டுகிறேன் என தெரிவித்தார். மேலும் 100மாணவர்கள் 15பாடல்களை இசைக்கருவிகள் மூலம் வாசித்து காட்டி பார்வையாளர்களை பரவவசப்படுத்தினர். அத்துடன் 100-மாணவர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் வரைந்திருந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சிக்கு வேலம்மாள் கல்வி குழுமத்தின் இயக்குனர் சசிக்குமார் தலைமை வகித்தார். வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் சாந்தி முன்னிலை வகித்தார். வேலம்மாள் பள்ளி தாளாளர் நாகமுத்து சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்த அனைவரையும் வரவேற்று அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


