எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கணவர் சாவு: மனைவி படுகாயம்

குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (55). இவர் தனது மனைவி புஷ்பவள்ளியுடன் (44) மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் அருகே உள்ள மஞ்சக்குழி கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துள்ளார். அப்போது மஞ்சக்குழி பஸ் நிறுத்தம் அருகே எதிர்புறம் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதிவிட்டு

News image
Updated On :11 பிப்ரவரி 2013, 10:58 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கணவர் இறந்தார். மனைவி படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (55). இவர் தனது மனைவி புஷ்பவள்ளியுடன் (44) மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் அருகே உள்ள மஞ்சக்குழி கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துள்ளார். அப்போது மஞ்சக்குழி பஸ் நிறுத்தம் அருகே எதிர்புறம் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதிவிட்டு தலைமறைவானது. இவ்விபத்தில் கிருஷ்ணமூர்த்தி, புஷ்பவள்ளி ஆகிய இருவரும் படுகாயமுற்று சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பினனர் கிருஷ்ணமூர்த்தி மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று காலை கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.