சிதம்பரத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசு பஸ்கள், தனியார் மினி பஸ்கள் அனுமதியின்றி (பர்மிட்) இன்றியும், அனுமதிக்கப்பட்ட கிராமப்புற வழித்தடங்களில் செல்லாமல் மாற்று வழித்தடங்களிலும் செல்வதை கண்டித்தும்


அரசு பஸ்கள், தனியார் மினி பஸ்கள் அனுமதியின்றி (பர்மிட்) இன்றியும், அனுமதிக்கப்பட்ட கிராமப்புற வழித்தடங்களில் செல்லாமல் மாற்று வழித்தடங்களிலும் செல்வதை கண்டித்தும், புதிய ஆட்டோர் பர்மிட் வழங்குவதை நிறுத்திட வலியுறுத்தியும் ஆட்டோர் தொழிலாளர்கள் சங்கம், அனைத்து ஆட்டோர் ஓட்டுநர் உரிமையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரம் காந்திசிலை அருகே நடைபெற்றது.
ஆட்டோ சங்க வட்டத் தலைவர் டி.மோகன்தாஸ் தலைமை வகித்தார். தொழிலாளர் விடுதலை முன்னனி மு.பாண்டியன், ரா.இமயவரம்பன்ஸ த.ஸ்ரீதர், அ.அன்புதாஸ், பி.முத்துகிருஷ்ணன், வி.சேரன், கே.வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் ஏ.பாபு, ஆட்டோ சங்க செயலாளர் எம்.முத்து, சாலைப் போக்குவரத்துறை மாவட்டச் செயலாளர் எம்.பெரியசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். பொருளாளர் டி.மகாலிங்கம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...