எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரத்தில் அரசு மருத்துவமனையில் திருட்டு: பெண் கைது

சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த ஐயப்பன் (38). இவரது தனது மனைவி பிரசவத்திற்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு தங்கை பிரேமாவதியுடன் வந்துள்ளார். அப்போது புறநோயாளிகள் பிரேமாதவதி அண்ணன் குழந்தையை காண்பிப்பதற்காக டோக்கன் கொடுக்கும் இடத்தில் கியூ வரிசையில் நின்றுள்ளார். அப்போது குழந்தையை

News image
Updated On :13 பிப்ரவரி 2013, 1:00 pm

G.Sundararaj

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் குழந்தைகளிடம் தாயத்து, செயின் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த ஐயப்பன் (38). இவரது தனது மனைவி பிரசவத்திற்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு தங்கை பிரேமாவதியுடன் வந்துள்ளார். அப்போது புறநோயாளிகள் பிரேமாதவதி அண்ணன் குழந்தையை காண்பிப்பதற்காக டோக்கன் கொடுக்கும் இடத்தில் கியூ வரிசையில் நின்றுள்ளார். அப்போது குழந்தையை தான் வைத்துக் கொள்வதாக சீர்காழி தாலுக்கா மாதுரவேலூரைச் சேர்ந்த பவித்ரா (20) கூறி குழந்தை வாங்கிக் கொண்டார். குழந்தை கழுத்திலிருந்து 1 கிராம் தங்க தாயத்து காணமல் போனது கண்டு பிரேமாவதி அதிர்ச்சியுற்று பவித்ராவை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். பின்னர் நகர குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் அதே அரசு மருத்துவமனையில் பவித்ரா கடந்த 22-11-2012 அன்று மதுராந்தகநல்லூரைச் சேர்ந்த இளவரசி என்பவரது குழந்தையின் 4 கிராம் செயினை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து நகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து பவித்ராவை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.