வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சில்லரை நாணயம் தருவதாக கூறி உப்பு பாக்கெட்டை கொடுத்து ஏமாற்றிய ஆந்திராவைச் சேர்ந்தவர் கைது

சிதம்பரம் வண்டிகேட் அன்சாரி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (32). இவர் பஸ் நிலைய டாஸ்மாக் கடை விற்பனையாளராக உள்ளார். இவரிடம் செவ்வாய்க்கிழமை மாலை அடையாள தெரியாத ஒருவர் தன்னிடம் ரூ.11 ஆயிரத்திற்கு சில்லரை நாணயம் உள்ளதாகவும், மாலை போன் செய்வதாகவும், அப்போது வந்த சில்லரை வாங்கிச்

News image
Updated On :13 பிப்ரவரி 2013, 12:43 pm

G.Sundararaj

டாஸ்மாக் மதுபானக்கடை விற்பனையாளரிடம் சில்லரை நாணயம் தருவதாக கூறி உப்பு பாக்கெட்டை கட்டிக் கொடுத்து ஏமாற்றியவரை நகர போலீஸார்  கைது செய்தனர்.

சிதம்பரம் வண்டிகேட் அன்சாரி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (32). இவர் பஸ் நிலைய டாஸ்மாக் கடை விற்பனையாளராக உள்ளார். இவரிடம் செவ்வாய்க்கிழமை மாலை அடையாள தெரியாத ஒருவர் தன்னிடம் ரூ.11 ஆயிரத்திற்கு சில்லரை நாணயம் உள்ளதாகவும், மாலை போன் செய்வதாகவும், அப்போது வந்த சில்லரை வாங்கிச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். அதேபோல் அந்த மனிதர் மாலை போன் செய்து வடக்குமெயின்ரோடு பெட்ரோல் பங்க் அருகே சில்லரை நாணயத்துடன் நிற்பதாக போன் செய்துள்ளார். அதன் பேரில் விற்பனையாளர் செந்தில்குமார் ரூ.11 ஆயிரத்துடன் சென்று, அவரிடம் பணத்தை கொடுத்து, சில்லரை பாக்கெட்டை அளித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் பாக்கெட்டை பிரித்து பார்த்த போது நாணயத்திற்கு பதிலாக உப்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சியுற்று அந்த மர்மமனிதரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த மர்மஆசாமி ஆந்திர மாநிலம் திட்டூர் மாவட்டம், மிட்டூர் பகுதியைச் சேர்ந்த சீனுவாசஐயர் மகன் முரளி (47) என தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து முரளியை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.