கலால் கொள்கை வழக்கு தொடர்பாக விடுவிக்கப்பட்டோருக்குத் தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றுவோம் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா கூறினார்.
ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா கூறியதாவது,
தில்லி உயர்நீதிமன்ற நோட்டீஸ் குறித்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், நாங்கள் நீதிமன்றத்தை மதிக்கிறோம், தில்லி உயர்நீதிமன்றத்தின் செயல்முறைகள் எதுவாக இருந்தாலும், அனைத்து சட்ட நடைமுறைகளையும் நாங்கள் பின்பற்றுவோம் என்று அவர் கூறினார்.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஏற்றுள்ளது. இதையடுத்து, முன்னாள் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரிடம் இந்த வழக்கின் நிலைப்பாடு குறித்து பதில் கோரியுள்ளது.
தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்ததற்கான உரிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, தில்லி முன்னாள் முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 23 பேரைக் கடந்த வாரம் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
இந்த நிலையில், கேஜரிவால் உள்பட 23 பேரின் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. சிபிஐ தாக்கல் செய்த மனுவில், முன்னாள் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரிடம் தில்லி உயர்நீதிமன்றம் பதில் கோரியுள்ளது.
கலால் கொள்கை வழக்கில் கேஜரிவால் மற்றும் சிசோடியாவை விடுவித்த விசாரணை நீதிமன்ற உத்தரவு விபரீதமானது என்றும், குற்றவியல் சட்டத்தையே தலைகீழாக மாற்றிவிட்டது என்றும் சிபிஐ வாதிட்டது. இதைத்தொடர்ந்து, சிபிஐயின் மனு விசாரணையைத் தில்லி நீதிமன்றம் ஏற்றுள்ளது. இந்த வழக்கின் விசாரணை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Summary
Senior Aam Aadmi Party leader Manish Sisodia on Tuesday expressed full confidence in the judiciary and said that he and others who were recently discharged in the excise policy case but were served notices by the Delhi High Court later, would follow all legal processes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபான கொள்கை வழக்கில் கேஜரிவால்,சிசோடியாவுக்கு ஆஜராக மூத்த வழக்குரைஞா்கள் நியமிக்கப்படுவா்: நீதிபதி எஸ்.கே.சா்மா

மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு! தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

மதுபான கொள்கை வழக்கு விசாரணை: கேஜரிவாலின் கோரிக்கையை நிரகாரித்தாா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி!

தில்லி கலால் கொள்கை வழக்கு: உயா்நீதிமன்ற நோட்டீஸ் கவிதாவிடம் சமா்ப்பிப்பு
விடியோக்கள்

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


