யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பிப்.28-ல் சென்னையில் அஸ்வமேத யாகம்: தமிழ்நாடு கள் இயக்கம்

தமிழ்நாடு கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கைகளை நியாயப்படுத்தும் விதத்திலும், கோரிக்கைகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கிலும், ஆளும் அரசு மற்றும் வாழும் மக்களின் கவனத்தை

News image
Updated On :14 பிப்ரவரி 2013, 7:49 am

கோ.ஜெயக்குமார்

தமிழ்நாடு கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கைகளை நியாயப்படுத்தும் விதத்திலும், கோரிக்கைகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கிலும், ஆளும் அரசு மற்றும் வாழும் மக்களின் கவனத்தை இதன்பால் ஈர்க்கும் போக்கிலும், சென்னையில் பிப்ரவரி 28-ம் தேதி அஸ்வமேத யாகம் நடத்த தமிழ்நாடு கள் இயக்கம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறியதாவது:

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலிருந்து புறப்படும் அஸ்வமேத யாகக் குதிரை, கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலகத்தை வந்தடையும். தனிநபர் சத்தியாகிரக அடிப்படையில் ஒரு போராளி மட்டுமே இந்தக் குதிரையை நடத்திச் செல்வார். வந்திருக்கும் இதர போராளிகளும், ஆதரவாளர்களும், தலைவர்களும் வாழ்த்துரை வழங்குவோராகவே இருப்பர்.

ஆளும் அரசுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் சார்பில், குதிரையைத் தடுத்து நிறுத்துவோருக்கு வாதிடும் உரிமை வழங்கப்படும். இந்த வாத விவாதம், ஜனநாயக நெறிமுறைப்படி சென்னையில் உள்ள ஒரு அரங்கில் நடத்தப்படும். சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு கருதி, பத்திரிக்கை மற்றும் ஊரடகங்கள் மட்டுமே பார்வையாளர்களாக இருந்து செய்தியினை மக்களுக்கு கொண்டு செல்வர். ஊடக நேரடி ஒளிபரப்பிற்கு அனுமதி இருக்கும்.

முற்கோள் (Thesis), முரண்கோள் (Anti-Thesis), முற்றுக்கோள் (Synthesis) என்ற வாத-விதாத அடிப்படையில் இந்த நிகழ்வு இருக்கும். நடைபெற உள்ள வாத-விவாதத்தில், தமிழ்நாடு கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கையில் நியாயமே இல்லை என நிரூபித்து விட்டால், இயக்கம் கோரிக்கையை கைவிடும், கொண்டிருக்கும் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும், போராட்டத்தை விலக்கிக் கொள்ளும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.