யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :14 பிப்ரவரி 2013, 1:11 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அயன் கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கையாக்கோனார் மகன் தவசிலிங்கம். இவருக்கும் இதே இடத்தைச் சேர்ந்த சுபா (36) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று இரு குழந்தைகள் உண்டு. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக சுபா கணவரைவிட்டுப் பிரிந்து தாய் வீட்டில் உள்ளார்.

இந்நிலையில் சுபா இருந்த இடத்திற்குச் சென்ற தவசிலிங்கம், தகாத வார்த்தைகளால் பேசி சுபாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து சுபா, நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் எம்.புவனேஷ்வரி வழக்குப் பதிவு செய்து தவசிலிங்கத்தைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.