எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்: பேச்சுவார்த்தைக்கு பின்னர் முடிவுற்றது

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன், ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் ஆகியோர் தலைமையில் துணைவேந்தர் வீட்டின் வாயிற்படியில்

News image
Updated On :15 பிப்ரவரி 2013, 11:35 am

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினரின் துணைவேந்தர் வீட்டில் தொடங்கிய தொடர் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை வெள்ளிக்கிழமை காலை தொடங்கினர். பின்னர் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் துணைவேந்தர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டு மாலை 3.30 மணிக்கு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன், ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் ஆகியோர் தலைமையில் துணைவேந்தர் வீட்டின் வாயிற்படியில் அமர்ந்து காலை 11 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். ஆசிரியர்- ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் 7 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதை வாபஸ் பெறக்கோரியும், வேளாண்புல முதல்வர் எம்.கதிரேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளுடன் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஊழியர் சங்க நிர்வாகிகள் 7 பேர் மீதான தற்காலிக பணிநீக்கம் உத்தரவை நீக்கி தனி, தனியாக உத்தரவு வழங்கியதை அடுத்து ஆசிரியர்-ஊழியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மாலை 3.30 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டதக்தை வாபஸ் பெற்றனர். ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டத்தை அடுத்த பல்கலைக்கழக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.