காரைக்கால் பெருமாள் கோவிலில் பிரம்மோற்ஸவ கொடியேற்றம்
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்கால் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் 14 நாள்கள் நடக்கக்கூடிய பிரமோத்சவ விழாவுக்கான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியார் சமேத ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிக்கம்பத்தின் அருகே எழுந்தருளச்செய்யப்பட்டார். சிறப்பு ஆராதனைகளுடன் பட்டாச்சாரியார்கள் கொடியேற்றினர்.
கொடியேற்றத்தையொட்டி கொடிக்கம்பத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தினமும் சேஷ வாகனம், கருட வாகனம், ஹனுமந்த வாகனம், சிம்ம வாகனம், திருக்கல்யாண உத்சவம், வெண்ணைய்த்தாழி உத்சவம், தேர் ஆகியவற்றில் பெருமாள் வீதியுலாவுக்கு எழுந்தருளுகிறார்.
பிப். 25-ம் தேதி திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜப்பெருமாள் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அருள்பாலிக்கும் பெருமாள் சங்கமித்து நடக்கும் தீர்த்தவாரியில் நித்யகல்யாணப் பெருமாள் பங்கேற்கிறார்.
பிப்.27-ம் தேதி கோவில் அருகே உள்ள அம்மையார் குளம் என்றழைக்கப்படும் சந்திரபுஷ்கரணியில் தெப்ப நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிப்.28-ம் தேதி விடையாற்றியுடன் உத்சவம் நிறைவடைகிறது. உத்சவத்தையொட்டி தினமும் யாகசாலை திருவாராதனமும், திவ்யபிரபந்த சேவையும் நடைபெறுகிறது. உத்சவத்தின் முதல் நாள் முதல் 8ஆம் நாள் வரை இரவு 10 மணிக்கு திருப்பள்ளியறை சேவை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி (கோயில்கள்) ஏ.ராஜராஜன் வீராசாமி, கோவில் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி, ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபாவினர் ஆகியோர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...