சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

நிதிமுறைகேடு: உசுப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீக்கம்

நிதி முறைகேடு செய்ததாக சிதம்பரம் அருகே உள்ள உசுப்பூர் ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் உத்திரவிட்டுள்ளார்.

Updated On :15 பிப்ரவரி 2013, 5:41 am

நிதி முறைகேடு செய்ததாக சிதம்பரம் அருகே உள்ள உசுப்பூர் ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் உத்திரவிட்டுள்ளார்.

சிதம்பரம் அருகே உள்ள உசுப்பூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ஜி.எம்.கணேசன். இவர் தானே புயல், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட 9 இனங்களில் ரூ.30 லட்சம் அளவிற்கு நிதி முறைகேடு செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் விசாரணை மேற்கொண்டதில் நிதி முறைகேடு செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து கணேசனை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆட்சியரின் பதவிநீக்கம் உத்தரவை ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் வாங்க மறுத்ததால், குமாரட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், சுந்தரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் குமாரகிருஷ்ணன் முன்னிலையில் கணேசனின் பதவிநீக்க உத்தரவை, வியாழக்கிழமை அவரது வீட்டின் சுவற்றில் ஒட்டினர். மேலும் தற்காலிக தலைவராக துணைத் தலைவர்  முத்துக்குமரன் செயல்படுவார் என ஆட்சியரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.