தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: தமிழகத்திலிருந்து கச்சத்தீவினை தாரை வார்த்தவர் கருணாநிதி. 2006-11 ஆண்ட கருணாநிதி கஜானாவை காலி செய்து, 1 கோடியே 20 லட்சம் கடனை வைத்து சென்றார். அதன்பிறகு ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா டாஸ்மாக் மதுபானக்கடைகளை அரசுடைமையாக்கி ஆண்டு ரூ.15 ஆயிரம் கோடி வருமானத்தை பெருக்கினார். ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையில் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறார். முதல்வர் ஜெயலலிதா அரிசி மானியமாக ரூ.4990 கோடியும், மின்வாரியத்திற்கு ரூ.3300 கோடி மானியமும், விலையில்லா மிக்சி, கிரைண்டருக்கு 2 ஆயிரம் கோடி மானியமும், தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு ரூ.780 கோடியும், மேம்படுத்தப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.750 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்தியஅரசில் அதிகார சக்தியாக அமர வேண்டும் என்பது ஜெயலலிதாவின் நோக்கமாகும். அதற்கு தமிழகத்தில் நாம் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். தமிழகம் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்பட வேண்டுமென்றால் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வெற்றியை அளித்து பிறந்தநாள் பரிசாக ஜெயலலிதாவிடம் அளிக்க உறுதி ஏற்போம் என தெரிவித்தார்.