தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெண் கொலை வழக்கில் தேடப்படும் இளைஞரின் பாஸ்போர்ட் முடக்கம்

கோவையில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் இளைஞரின் பாஸ்போர்ட்டை போலீஸார் முடக்கியுள்ளனர்.

News image
Updated On :23 பிப்ரவரி 2013, 4:07 pm

சீனிவாசன்

கோவையில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் இளைஞரின் பாஸ்போர்ட்டை போலீஸார் முடக்கியுள்ளனர்.

திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன். அவரது மனைவி சரோஜினி (54). இவர்கள் கோவை, அவினாசி சாலையில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

பிப்ரவரி 13 ஆம் தேதி சரோஜினி திடீரென காணாமல் போனார். பிப்ரவரி 16 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த ரோஸ்கோர்ஸ போலீஸார், அவரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், அவர்களது வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சேர்ந்த யாசர் அராபத் (23) என்பவரது வீட்டில் சரோஜினியின் உடல் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. உடல் உறுப்புகளில் சரோஜினியின் தொடைப் பகுதிகள் காணாமல் போயிருந்தன.

இது குறித்து கோவை குற்றப்பிரிவு துணை ஆணையர் சுகுமாறன் தலைமையில் உதவி ஆணையர்கள் அடங்கிய தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேலப்பாளையத்தில் உள்ள யாசர் அராபத் வீட்டில் தனிப்படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கிடைத்த அவரது பாஸ்போர்ட்டை போலீஸார் முடக்கியுள்ளனர்.

அவரது குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த விவரம்: யாசர் அராபத் அங்குள்ள ஒரு தனியார் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ படித்துள்ளார். பின்னர் மலேசியாவுக்கு சென்ற அவர், அங்கு நான்கு ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்துள்ளார்.

பிறகு சொந்த ஊருக்கு வந்தவர், சம்பாதித்த பணம் எதையும் வீட்டுக்குக் கொடுக்கவில்லை. பெங்களூரில் சென்று பி.இ. படிப்பதாகக் கூறிவிட்டு கடந்த 8 மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு கிளம்பினார். பிறகு அவர் கோவையில் இருந்த விஷயம் போலீஸார் மூலமாகவே தங்களுக்குத் தெரியும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிறு விஷயங்களுக்கும் அதிக கோபம் கொள்வார் யாசர் அராபத். ஒரு முறை சிக்னல் சரியாக கிடைக்காத கோபத்தில் லேப்டாப்பைத் தூக்கிப் போட்டு  உடைத்துவிட்டார் என்று குடும்பத்தினர் மேலும் தெரிவித்ததாக போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.