மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், காயமடைந்த பெண் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வி. துரைசாமிபுரத்தில் தனியார் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. கடந்த 18ஆம் தேதி இப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது இந்த பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் ஓர் அறை தீப்பற்றியது. அந்த அறையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சேதுராமலிங்கபுரத்தைச் சேர்ந்த குருவம்மாள் (55), விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் (30) ஆகிய இருவரும் தீயில் சிக்கி பலத்த காயமடைந்தனர். இவர்கள் இருவரும் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் வெள்ளிகிழமை இரவு குருவம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது: முதல்வர் ஸ்டாலின்

மிக மோசமான நிலையில் ஈரான்! டிரம்ப் பேட்டி | US | Iran | Trump
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

