ஸ்ரீவிலி. அருகே வீடு புகுந்து நகைகள் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சின்ன பண்டிதன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெ.ஞானவேல் (47). சமையல் மாஸ்டர். இவர் வேலைக்குச் சென்ற பின் மனைவி மற்றும்


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சின்ன பண்டிதன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெ.ஞானவேல் (47). சமையல் மாஸ்டர். இவர் வேலைக்குச் சென்ற பின் மனைவி மற்றும் மகளும் வேலைக்குச் சென்று விட்டார்களாம். வீட்டின் சாவியை வீட்டின் கழிவு நீர் போகும் ஒரு குழாயில் மறைத்து வைப்பார்களாம். மனைவி வேலை முடிந்து வந்து வீட்டின் கதவை வழக்கம் போல் சாவி இருந்த இடத்திலிருந்து எடுத்து திறந்துள்ளார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, லாக்கரில் இருந்த மூன்று பவுன் செயின், அரை பவுன் தோடு, அரை பவுன் மாட்டல் ஆகியவை காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.இது குறித்து ஞானவேல், மல்லி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...