தே.மு.தி.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் என்.டி.ராஜா அ.தி.மு.க.வில் இணைந்தார்
விருதுநகர் மாவட்ட தே.மு.தி.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் என்.டி.ராஜா, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க


விருதுநகர் மாவட்ட தே.மு.தி.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் என்.டி.ராஜா, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
தே.மு.தி.க.வின் விருதுநகர் மாவட்டச் செயலாளராக இரு ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் என்.டி.ராஜா. கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில், என்.டி.ராஜா தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். அவரை சால்வை அணிவித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வரவேற்றார்.
அப்போது உடன் முன்னாள் அமைச்சர் தா.இன்பத்தமிழன், மாவட்ட அ.தி.மு.க. வழக்குரைஞர் பிரிவு செயலாளர் ஏ.மங்களசாமி, துணைச் செயலாளர் எஸ்.பி.திலகராஜன், அரசு வழக்குரைஞர் எம்.ஜெகதீசன், நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, மம்சாபுரம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் பி.அய்யனார், நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...