சிதம்பரம் ஸ்ரீஆத்மநாதருக்கு வெள்ளிக்கவசம் பொருத்தம்
இந்த திருபாற்கடல் மடத்தில் மாணிக்கவாசகர் திருவாசகம் சொல்ல அந்தணர் வடிவில் ஸ்ரீநடராஜப் பெருமானே வந்து திருவாசகத்தை எழுதி முடிவில் சிற்றம்பலமுடியான் என


சிதம்பரம் வேங்கான் தெருவில் திருபாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீஆத்மநாதருக்கு பெளர்ணமி மக நட்சத்திரமான வெள்ளிக் கவசம் பொருத்தப்பட்டது.
இந்த திருபாற்கடல் மடத்தில் மாணிக்கவாசகர் திருவாசகம் சொல்ல அந்தணர் வடிவில் ஸ்ரீநடராஜப் பெருமானே வந்து திருவாசகத்தை எழுதி முடிவில் சிற்றம்பலமுடியான் என கையொப்பமிட்டதாக சிறப்பு வாய்ந்த வரலாறு பெற்ற கோயில் ஸ்ரீஆத்மநாதர் கோயில் (மாணிக்கவாசகர் பர்ணசாலை) ஆகும். சிவபெருமானும், மாணிக்கவாசகரும் ஒன்றர கலந்த மக நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும் சிவனடியார்கள் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீஆத்மநாதருக்கு சிவனடியார்கள் 100 பேர் சேர்ந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளிக்கவசத்தை செய்து வழங்கியுள்ளனர். மக நடத்திரமான திங்கள்கிழமை அன்று கோயிலில் ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீஆத்மநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் பொருத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று திருவாசக திருமுற்றோதல் செய்து தரிசித்தனர். காலையில் ராமலிங்கம் பிள்ளை தலைமையிலான சிவனடியார்கள் பங்கேற்று சிவபூஜை செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மட நிர்வாகி வை.பசவராஜ் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...