வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காரைக்கால் அம்மையார்குளம் தெப்பத்தில் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்

பிரம்மோத்சவம் நிறைவில் காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் உபயநாச்சியார்களுடன் வியாழக்கிழமை இரவு தெப்பத்தில் எழுந்தருளினார்.

News image
Updated On :28 பிப்ரவரி 2013, 5:15 pm

செல்வ முத்துகுமாரசாமி

பிரம்மோத்சவம் நிறைவில் காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் உபயநாச்சியார்களுடன் வியாழக்கிழமை இரவு தெப்பத்தில் எழுந்தருளினார்.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப்பெருமாள் கோவிலில் மார்ச் மாதம் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பிரம்மோத்சவம் நடைபெற்றுவந்தது. 9-ம் நிகழ்ச்சியாக ஸ்ரீ நித்யகல்யாணப்பெருமாள் அம்மையார் குளத்தில் தீர்த்தவாரி செய்து கொடியிறக்கம் செய்யப்பட்டது.

பிரம்மோத்சவ நிறைவைத் தொடர்ந்து 11-ம் நாள் நிகழ்ச்சியாக திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு பெருமாள் எழுந்தருளி திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜப்பெருமாள் மற்றும் பிற கோவில்களின் பெருமாளுடன் இணைந்து சமுத்திர தீர்த்தவாரி செய்தார். 12-ம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.

13-ம் நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை காலை சுவாமிகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை ஸ்ரீதேவி பூதேவியாருடன் ஸ்ரீ நித்யகல்யாணப்பெருமாள் மாடவிளாகப் புறப்பாடு செய்யப்பட்டு இரவு அம்மையார் குளத்தில் செய்யப்பட்டிருந்த மின், புஷ்ப அலங்கார தெப்பத்துக்கு எழுந்தருளினார்.

தெப்பத்தில் சுவாமிகள் மூன்று முறை குளத்தை சுற்றிவரும்படி செய்யப்பட்டது. ஒவ்வொரு சுற்று தொடக்கத்திலும் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் தெப்பத்தில் இருந்தவாறு பல்வேறு இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குளத்தை சுற்றி ஏராளமான பக்தர்கள் நின்று சுவாமிகளை வழிபாடு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் காரைக்கால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், பி.ஆர்.என்.திருமுருகன் மற்றும் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் வகையறா தேவஸ்தான  தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வியாழக்கிழமை விடையாற்றி உத்சவம் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.