ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், சமய நல்லிணக்கப் பேரவை சார்பில், சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விழா

News image
Updated On :1 ஜனவரி 2013, 3:00 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், சமய நல்லிணக்கப் பேரவை சார்பில், சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விழா திரு இருதய தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஜி.எஸ். இந்து மேல்நிலைப் பள்ளி தாளாளர் டி.ஏ.எஸ்.ராமஸ்வாமி தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் கோயில் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் எம்.சண்முகநாதன் முன்னிலை வகித்தார். பேரவையின் தலைவர் அருட்பணியாளர் எஸ்.சேவியர்ராஜ் அடிகளார் வரவேற்றார்.சி.எஸ்.ஐ. தோமா தேவாலயத்தின் சபைகுரு அருள்திரு கே.முத்துச்செல்வன், கிறிஸ்துமஸ்-புத்தாண்டு தேவ செய்தியளித்து ஆசியுரை வழங்கினார்.விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன், ஹாஜி ஏ.ஜெய்னுலாபுதீன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில் ஒய்.எம்.சி.ஏ. தலைவர் எஸ்.சார்லஸ் மனோகரன், சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஜி.எட்வின் கனகராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பி.புனிதன், தலைமை ஆசிரியர் ஐ.பரலோகம், கே.என்.எச். விடுதி தாளாளர் ஜே.ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாணவ மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஓய்வு பெற்ற ஆசிரியர் பிரகாசம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.