ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வி.பி.எம்.எம். கல்வி அறக்கட்டளை சார்பில் 15-வது பாவை விழா தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். கல்வி அறக்கட்டளை மற்றும் வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் 15-வது பாவை விழா வியாழக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.

News image
Updated On :3 ஜனவரி 2013, 5:26 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். கல்வி அறக்கட்டளை மற்றும் வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் 15-வது பாவை விழா வியாழக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.

கிருஷ்ணன்கோவிலில் உள்ள வி.பி.முத்தையாபிள்ளை-மீனாட்சியம்மாள் மகளிர் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் இந்த திருப்பாவை-திருவெம்பாவை விழா வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை முடிய நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு ஆன்மீக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிக்கு நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

விழா தொடக்கத்தையொட்டி கல்லூரி மாணவிகள் பங்கேற்கும் பாவை பேரணியை கல்வி நிறுவனத் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் தலைமையில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வாணையர் எம்.ராஜ்யகொடி, நகர்மன்ற தலைவி வி.செந்தில்குமாரி ஆகியோர் ஸ்ரீஆண்டாள் சந்நிதி முன்பு தொடங்கி வைத்தனர். பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று கல்லூரி வளாகத்தை அடைந்தது.

அங்கு பாவை விழா தொடர் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. கோவை, சின்னவேடம்பட்டி, கௌமார மடாலயத்தின் ஆதீனத் தலைவர் தவத்திரு குமரகுருபரசுவாமிகள் தலைமை தாங்கி ஆசியுரையாற்றினார். ஸ்ரீஆண்டாள் திருமாலை ஆண்டாள் என்ற தலைப்பில் பூஜித குரு பால பிரஜ்ஜாபதி அடிகளார் சிறப்புரையாற்றினார். நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ், எஸ்.வி.எம்.சுப்பிரமணியன் (எ) மனோகரன், ஜி.மாரியப்பன், ஏ.பி.ஆர்.பாண்டியராஜன், கே.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மதுரை ராணி மெய்யமை ஆச்சி பெண்கள் தமிழிசைக் கல்லூரியின் முதல்வர் மற்றும் நெறியாளர் எஸ்.மல்லிகாவின் வீணைக் கச்சேரி நடைபெற்றது.

விழாவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் வி.பி.எம்.எஸ்.தங்கபிரபு, தாளாளர் பழனிச்செல்வி, இணைத் தாளாளர் வி.பி.எம்.எஸ்.துர்காமீனலோஷினி, வாலாஜாபேட்டை எம்.எம்.குரூப்ஸ் தலைவர் டபிள்யூ.மகேந்திரவர்மன், இயக்குநர் எம்.கமல்ராகவன், சிந்துஜா மற்றும் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், ஏராளமான பெற்றோர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.