அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருநள்ளாறில் சாலைமறியல்: பக்தர்கள் பாதிப்பு

திருநள்ளாறில் அரசுப் பேருந்து டயர் காற்றைத் திறந்துவிட்ட உதவி ஆய்வாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை திருநள்ளாறில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 5:29 am

செல்வ முத்துகுமாரசாமி

திருநள்ளாறில் அரசுப் பேருந்து டயர் காற்றைத் திறந்துவிட்ட உதவி ஆய்வாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை திருநள்ளாறில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

திருநள்ளாறில் இருந்து சென்னை செல்லும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து வழக்கமாக பயணிகளை ஏற்றும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், திருநள்ளாறுக்கு புதிதாக பொறுப்புக்கு வந்த உதவி ஆய்வாளர், பேருந்தை இங்கே நிறுத்தக் கூடாது என்று கூறி, பயணிகள் பேருந்தில் அமர்ந்திருக்கும்போதே, முன் டயர், பின் டயர் காற்றைத் திறந்துவிட்டுள்ளார். இதனை பேருந்து ஓட்டுநரிடம் பயணிகள் கூறியுள்ளனர். இதனால் பயணிகள் பெரிதும் கோபமடைந்தனர். தாங்கள் ஊருக்குச் செல்ல டிக்கெட் எடுத்துவிட்டு அமர்ந்திருக்கும்போது, காவல் உதவி ஆய்வாளர் இவ்வாறு செய்தது தவறு என்று கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.