நொய்டா, சோத்பூர் காலனியைச் சேர்ந்த 21 வயதான அப்பெண், அப்பகுதி 65-வது செக்டாரில் உள்ள ஒரு தனியார் பி.பீ.ஓ. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு அலுவலகத்தில் இருந்து வழக்கம் போல் வேலை முடிந்து வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருடன் வேலை செய்யும் 4 பெண் ஊழியர்களும் உடன் சென்றனர். சோத்பூர் காலனி வெளிப்பகுதியில் சக ஊழியர்கள் தங்களது வீடுகளுக்குப் பிரிந்து சென்றுவிட, இவர் மட்டும் தனியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம். ஆனால், அதன் பிறகு அவர் காணாமல் போனார். அவரைப் பல இடங்களில் குடும்பத்தினர் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.