இந்த நிலையில் நிபந்தைகளுடன் புலிகள் காப்பகம் கடந்த டிசம்பர் மாதம் 7 ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து மணிமுத்தாறு, பாபநாசம் அருவிகள் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பாபநாசம் அணையில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அணைப் பகுதியில் சுற்றுலா சார்ந்த தொழில் செய்து வரும் 300 குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இன்று மணிமுத்தாறு வந்த பி.எச். மனோஜ்பாண்டியன் எம்.பியை சந்தித்து மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து புகார் தெரிவித்தனர். தாமிரவருணி சுற்றுலாப் பயணிகள் படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் என். கோபாலகிருஷ்ணன், கே. கலான் உள்ளிட்டோர் மனோஜ்பாண்டியன் எம்.பி யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.