ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவிலி. ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்டு (எண்ணெய்காப்பு) உற்சவம் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்டு (எண்ணெய்காப்பு) உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. 8 நாட்கள் நடைபெறும்

News image
Updated On :7 ஜனவரி 2013, 3:04 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்டு (எண்ணெய்காப்பு) உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. 8 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவம் வரும் 14-ம் தேதி (சனிக்கிழமை) நிறைவடையும்.இதனையொட்டி, ஸ்ரீஆண்டாள் தங்கப் பல்லக்கில் மாட வீதி, பெரிய பெருமாள் மேல மாடவீதி, கந்தாடை வீதி வழியாக எழுந்தருளி கோபுர வாசலில் போர்வை படிகளைந்து திருவடி விளக்கம் நடைபெற்றது. பின்னர் மண்டபங்கள் கண்டருளி நாடகசாலை ஸ்ரீநிவாசன் சன்னதி விடாயாற்றியாகி எண்ணெய்காப்பு மண்டபம் சேருதல் நடைபெற்றது.

அங்கு தங்கவட்டவணையில் எழுந்திருளித் திருத்திரை வாங்கி திருவாராதனம் பட்டர்பிரான் சுருள்கோஷ்டி நடைபெற்றது. எண்ணெய் காப்பு சேவையும் ஷோடச உபசாரமும் நடைபெற்றது. மாலை ஸ்ரீஆண்டாள் பக்தி உலாவதல் நடைபெற்று, நீராட்டத் தொட்டிக்கு எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம் ஈரவாடை தீர்த்தக் கோஷ்டிக்குப் பின்னர் மண்டபத்தில் ஸ்ரீஆண்டாள் புறப்பாடாகி பக்தி உலாவுதல் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அம்மானை விளையாடுதல் படியேற்ற சேவை நடைபெற்றது. இரவு ஸ்ரீஆண்டாள் துளசி வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.