ஸ்ரீவிலி.யில் கிணற்றில் தவறி விழுந்து சத்தீஸ்கர் மாநில இளைஞர் சாவு
சத்தீஸ்கர் மாநிலம், கொண்டக்கால் மாவட்டம், புகப்போரான் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்மர்சிங் மகன்


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் காயமுற்ற சத்தீஸ்கர் மாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சத்தீஸ்கர் மாநிலம், கொண்டக்கால் மாவட்டம், புகப்போரான் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்மர்சிங் மகன் தினேஷ் (25). இவர் போர்வெல் லாரியில் வேலை செய்து வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வி.முத்துலிங்காபுரம் ஊருக்கு வடக்கேயுள்ள அழகுமலை என்பவரின் பம்பு செட் தோட்டத்தில் உள்ள கிணற்றில் டிசம்பர் 20-ம் தேதி சைடூ போர் போட்டுள்ளார்கள். அதில் தினேஷ் வேலை செய்துள்ளார். வேலை முடிந்து கிணற்றில் இருந்து ஏறும் போது தவறி உள்ளே விழுந்த தினேஷ் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...