திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சர்ச் கட்ட நிலம் வாங்கி பிணத்தைப் புதைப்பதற்கு எதிர்ப்பு: சாத்தூரில் மக்கள் போராட்டம்

சாத்தூர் அருகே சின்னக்கொல்லப்பட்டி கிராமத்தில் கிராம நுழைவாயில் பகுதியில் ஒரு தரப்பினர் சர்ச் கட்டுவதற்காக இடத்தை வாங்கியுள்ளனர். ஆனால் அங்கே பிணத்தைப் புதைப்பதைக் கண்டித்து சின்னக்கொல்லப்பட்டி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Updated On :8 ஜனவரி 2013, 6:20 am

சாத்தூர் அருகே சின்னக்கொல்லப்பட்டி கிராமத்தில் கிராம நுழைவாயில் பகுதியில் ஒரு தரப்பினர் சர்ச் கட்டுவதற்காக இடத்தை வாங்கியுள்ளனர். ஆனால் அங்கே பிணத்தைப் புதைப்பதைக் கண்டித்து சின்னக்கொல்லப்பட்டி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சாத்தூர் அருகே புதுச்சூரன்குடியைச் சேர்ந்த ஓர் அமைப்பினர் ஊர் எல்லையில் ஓர் இடத்தை, சர்ச் கட்டுவதாகக் கூறி இடத்தை வாங்கியுள்ளனர்.

ஆனால், வெள்ளிக் கிழமை விபத்தில் இறந்த ஒருவரின் உடலை அந்த இடத்தில் புதைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோர் சின்னக்கொல்லப்பட்டி சாத்தூர் சாலையில் ஓரத்தில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டனர். 

சுமார் 2 மணி நேரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.  சாத்தூர் டிஎஸ்பி சின்னையா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இது குறித்து தெரியப்படுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த இடத்தில் 50க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.