ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தென் மாவட்ட யோகா போட்டி: வி.பி.எம்.எம். பள்ளி அதிக புள்ளிகள் எடுத்து வெற்றி

தமிழ்நாடு மாநில யோகா விளையாட்டு மேம்பாட்டு சங்கம் மற்றும் திருநெல்வேலி ஜென் யோகா வித்யாலயா

News image
Updated On :8 ஜனவரி 2013, 9:05 am

கோ.ஜெயக்குமார்

தென் மாவட்ட பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற யோகாசனப் போட்டியில் கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றனர்.

தமிழ்நாடு மாநில யோகா விளையாட்டு மேம்பாட்டு சங்கம் மற்றும் திருநெல்வேலி ஜென் யோகா வித்யாலயா ஆகியவை இணைந்து இந்த போட்டியை பாளையங்கோட்டையில் நடத்தியது.போட்டியில் தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து சுமார் 600 பள்ளி மாணவ மாணவியர் போட்டியில் கலந்து கொண்டனர்.போட்டியின் முடிவில் கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் 8 பேர் முதலிடத்தையும், 2 பேர் இரண்டாவது இடத்தையும், 2 பேர் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு தமிழ்நாடு மாநில யோகா, விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் மாரியப்பன் பரிசுகளை வழங்கினார்.

வெற்றி பெற்ற மாணவ மாணவியரையும், அவர்களுக்குப் பயிற்சி அளித்த யோகா பயிற்சியாளர் சுந்தரையும், வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர், துணைத் தலைவர் வி.பி.எம்.எஸ்.தங்கபிரபு, தாளாளர் பழனிச்செல்வி, துணைத் தாளாளர் துர்கா மீனலோஷினி, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.