எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தேவகோட்டை அருகே மூதாட்டியை தாக்கியதில் உயிரிழப்பு

தேவகோட்டை அருகேயுள்ளது சாத்திக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரி(வயது60). இவர் கடந்த இரண்டு

News image
Updated On :9 ஜனவரி 2013, 10:41 am

ARIVARASAN.J

தேவகோட்டை அருகேயுள்ளது சாத்திக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரி(வயது60). இவர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அருகிலுள்ள தனது தோட்டத்திற்கு மாடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு மர்ம மனிதர்கள் சிலர் அவரை தாக்கி அவர் கழுத்து காதில் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுவி்ட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக காரைக்குடி அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேவகோட்டை தாலுகா காவல்துறை ஆய்வாளர் முத்துராஜ் இது குறி்த்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.