இரவில் பொங்கல் பொருட்கள் வழங்கல்: கல்லிடைக்குறிச்சி ரேசன் கடைகளில் திரண்ட மக்கள்
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் வியாழக்கிழமை இரவு ரேசன் கடைகளில் பொங்கல் பொருட்கள் வழங்கியதால் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.


திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் வியாழக்கிழமை இரவு ரேசன் கடைகளில் பொங்கல் பொருட்கள் வழங்கியதால் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரொக்கப் பணம் ரூ. 100 ஆகியன வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தை புதன்கிழமை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
அம்பாசமுத்திரம் வட்டத்தில் வியாழக்கிழமை பொங்கல் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது. அனைத்து ரேசன் கடைகளிலும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இப்பொருட்கள் வழங்கப்படும்.
கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் லட்சுமிபதி கூட்டுறவு பண்டகசாலை மூலம் இயங்கும் ரேசன்கடைகளில் வியாழக்கிழமை இரவு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.
ரேசன்கடைகளுக்கு அரிசி, சர்க்கரை ஆகியன போதிய இருப்பு வந்து விட்ட நிலையில் ரொக்கப்பணம் வர தாமதம் ஏற்பட்டதால் பயனாளிகளுக்கு இப்பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இரவிலும் ரேசன் கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பொருட்கள் வாங்கி சென்றனர். மின்தடை ஏற்பட்ட போதிலும் பயனாளிகளுக்கு ரேசன் கடை பணியாளர்கள் சிரமத்திற்கு இடையே பொருட்கள் வழங்கினர்.
அம்பாசமுத்திரம் வட்டத்தில் அரிசி பெறும் 1,09,704 குடும்ப அட்டைகளுக்கு இப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. வியாழக்கிழமை மாலை வரை அம்பாசமுத்திரம் வட்டத்தில் 12,525 குடும்ப அட்டைகளுக்கு இப்பொருட்கள் வழங்கப்பட்டதாக வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...